Sunday, July 18, 2010

Saturday, July 10, 2010

எங்கள் வீட்டில் ஒரு சன்டே

அன்று ஞாயிறு, காலை ஒன்பது மணி ஆகியிருந்தது.
'என்னங்க, என்னங்க' எல்வி ஓடி வந்தாள். 'என்னங்க, நான் எழுதின கவிதைய எங்க forum ல pugazhthirukaanga' பெருமையாக கூறினாள்.
'ஒ அப்படியா.' என்று சுரத்தே இல்லாமல், T.V. ஐ பார்த்துக்கொண்டே கூறினான் எல்வீயின் மணாளன்.
அவள் மீண்டும் தொடர்ந்தாள், 'என்னங்க, நிறைய பேரு supernu சொல்லிருக்காங்க, நீங்களும் அத கேக்கறிங்களா?' அவனது பதிலுக்கு காத்திருக்காமல் கூறிக்கொண்டே போனாள். அது ஒரு instant ல எழுதினேங்க. Ofcourse சட்டுசட்டனு எழுதறவங்க அங்கே நிறைய பேரு இருக்காங்க, இருந்தாலும் எனக்கு ரொம்ப பெருமைய இருக்கு' அவள் இன்னும் நிறுத்தவில்லை. பேசிக்கொண்டே போனாள். அவன் திடிரென்று Stop என்பது போல கை நீட்டி, எல்லாம் சரி, எங்களுக்கு எப்போ டிபன் கெடைக்கும்' பரிதபமாய் கேட்டான்.
திடிரென்று நினைவு வந்தவளாய், 'ஐ~யை~யோ , நான் மறந்தே போய்டேங்க.' ஒரு நொடி தாமதிதவள் , பெரியதாய் புன்னகைத்தாள், 'என்னங்க, இந்த situationkum ஒரு கவிதை தோணுதுங்க. சொல்லட்டுமா?' எப்பவும் போல், பதிலுக்கு காத்திருக்காமல் முன்னேறினாள்.

'என் நினைவுகளால், உன் நினைவுகளை நிறைத்தேன்,
என் புன்சிரிப்பால் உன் மனதை நிறைத்தேன்,
என் சிக்கனதினால், உன் சேமிப்பை நிறைத்தேன்,
என் சமையலால், உன் வயிறை நிறப்ப மறந்தேனோ???!!!!'
--- முடித்தாள்.
'எப்படி இருக்குங்க, சொல்லுங்க சொல்லுங்க' என்று கண்கள் பளபளக்க கேட்டாள். அவன் பதிலேதும் சொல்லாமல், அவளையே பார்த்தான்.
'வா ஹரிஷ் கெளம்பலாம்,' என்று அருகில் சோர்ந்திருந்த மகனை அழைத்தான். 'எங்கச்சா?' 'ஹோட்டலுக்கு தான்' மறுப்பு சொல்லலாம் ஹரிஷ் கிளம்ன்பினான். 'என்னங்க எனக்கும் சேத்து வாங்கி வாங்க. நான் போய் இந்த கவிதைய forumla போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்' என்று கம்ப்யூட்டர் ரூமினுள் மீண்டும் நுழைந்தாள்.
'சுதீஷ் லக்கி அச்சா. பெரியவங்களுக்கு celerac கெடைக்காதா?' பாவமாய் கேட்டான் ஹரிஷ்.
'வயிறை நிறப்ப மறந்தால், எப்படி சேமிப்பை நிரப்புவது' என்று முனுமுனுத்துக்கொண்டே, அவர்கள் இருவரும் வெளியே கிளம்பினர். ஓரியன் ஹோட்டலை அடைந்தனர். ஆர்டர் கொடுத்தனர்.
'அப்பா, அம்மா டிபன் பண்ண மறந்துட்டாலும் நீங்க சண்ட போடாததுக்கு காரணம் இப்போ புரியுது' என்று, பளபளக்கும் கண்களோடு வந்திருந்த வெள்லாப்பதினையும் இஷ்டையும் இஷ்டதுடன் பார்த்கொண்டிருந்த அச்சாவிடம் கூறினான் மகன்.
'சன்டே நிதானமா, traditional டிப்பின சாப்டறது தனி சுகம்டா' சுருக்கமாக பதிலளித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தனர்
'அச்சா, நிஜமாலே, அம்மா எழுதினது நல்லா இருக்குமாபா, அவளோ பேரு புகழ்திருப்பாங்களா?' கேட்டான் ஹரிஷ்
'forum etiquette நு ஒன்னு இருக்கு. "நீ எழுதினது கேவலமா இருக்கு" நு யாருமே சொல்ல மாட்டாங்க. சிலர், motivate பண்ண குட் நு சொல்லுவாங்க, அவளோதான்' விளக்கினார் அச்சா. பின்னர் இருவரும் அமைதியாய்   சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தனர். பாதி வழி வந்திருந்த போது , ஹரிஷ் சொன்னான், 'அச்சா, நாம ஒண்ணு மறந்துட்டோம்' வண்டியை slow ஆகினார் அச்சா. 'ஆமாம்டா, சரி விடு, அசோக் ஸ்டோர்ஸ் ல பிரட் வாங்கிட்டு போய்டலாம்' சொல்லிவிட்டு, மறக்காமல், பிரட் வாங்கி கொண்டு வீடு வந்தனர் இருவரும், எல்வி இன்னும் கம்ப்யூட்டர் முன், எதோ செய்து கொண்டிருந்ததை பார்க்க.