Sunday, February 26, 2012

சிக் சுடிதார்

சிக் சுடிதார்

சிக்கென்ற சுடிதாரை சில்லென்ற கடையில்
சட்டென்று எடுக்காமல் சிலபல நேரம் செலவழித்தெடுத்து
சிட்டாய் வீட்டிற்கு சென்று சிரித்துகொண்டே போட்டுப்பார்த்தால்
சிறிய ஒரு பிரச்சனை
சின்னதாய் பெருத்துப்போன சிற்றிடையின் கீழ் இறங்கவில்லை சிக் சுடிதார்
சில்லாய் உடைந்து போன சின்ன இதயத்திற்கு மூளை கொடுத்த சில் ஐடியா
- சிக் சிக் ஜிம்
சட சடவென்று அங்கே ஓடி சில பல மாதம் சிந்திய வியர்வைவைக்கு பலனாய்
சிற்றிடையை திரும்பப்பெற்று சிக் சுடிதாரை அணிந்துகொண்டு
சித்திரமாய் வெளியே வந்தால்
சினேகிதி கேட்டாள்
'சுடிதார் என்ன பழசா?'
சிதைந்து போன இதயத்துடன் உடை மாற்றி
சுரத்தே இல்லாமல் இருந்த என்னை பார்த்து
சிரித்து கொண்டே பரண் மேல் ஏறியது
சிக் சுடிதார்