ஆனந்த 12 வது வகுப்பு கடைசி தேர்வு முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
அம்மா கேட்டாள், ' எப்படிடா பண்ணே? '
'ம்ம்' என்று பதில் வந்தது.
'ம்ம் னா? மீண்டும் கேட்டாள் .
'Ninety above வரும் நு வச்சுகோவேன் ' என்றான்.
'அப்பாடா, நாளைக்கு முதல் வேலையா ... ' சொல்லப்போனவளை தடுத்து,
'என்ன பிள்ளையாருக்கு தேங்கா உடைக்க போறியா ? கேட்டான்.
'அது செய்வேன்டா, அதுக்கு முன்னாடி நாளிலிருந்து இனி 6.30 கு தான் எழுந்திருப்பேன். மூணு நாலு வருஷமா 4.30 கு எழுந்து எழுந்து 6.30 கு எழுந்திருக்கற சுகமே போச்சுடா' என்று சிரித்தபடி சொன்னாள்.
'மத்தியானம் தன டெய்லி தூங்கறலே' என்று கேட்டன்.
'டேய், காலைல இன்னும் கொஞ்ச நேரம் துங்கற சுகமே தனிடா ' என்று மீண்டும் சிரித்தாள்.
மறுநாள் காலை, ஆனந்த் திடிரென்று முழித்தான். கட்டில் அருகில் இருந்த கடிகாரத்தை பார்த்தான். மணி 4.30 காட்டியது. சமயலறையிலிருந்து பழக்கப்பட்ட காபி வாசனை வந்தது, சிரித்து கொண்டே அங்கு சென்றான்.
'என்னமா உன்னக்கு மட்டும் 6.30 ஆச்சா ? ' கிண்டலாய் கேட்டான்
'எல்லாம் உன்னாலே தான்டா. டெய்லி 4.30 மணிக்கு காபி குடிச்சி பழகிபோச்சு, இப்போ என்னடானா, நாக்கு என்ன எழுப்பி காபி கேக்குது. உனக்கு வேணுமா?' கேட்டாள்.
'பல் தேய்க்க மாட்டேன், குடுப்பேன்ன குடு' இளித்தான்.
'போய் தூங்குடா போடா' என்று அவனை துரத்திவிட்டாள் அம்மா.
சிரித்துகொண்டே போய் மீண்டும் படுத்தான் ஆனந்த். அம்மா தனியாக நிம்மதியாக, relaxed ஆக காபி குடித்தாள்.

Thaai!
ReplyDeleteValiyaiyum sugamaai sumappaval!
Podigalaiyum punnagaikkul pudhaippaval!
your coffee is really very sweet.